பிரான்ஸில் தொங்கு பாராளுமன்றத்திற்கு வழிவகுத்த தேர்தல்!
பிரான்ஸில் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையல், பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் மோதல் வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இங்கிலாந்தைப் போலவே, பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக ஒரு ஆச்சரியமான பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார்.
இது தீவிர வலதுசாரி தேசிய பேரணி கட்சிக்கு அமோகமான வெற்றியை எதிர்பார்க்கும் ஒரு கடுமையான அரசியல் பிரச்சாரத்திற்கு வழிவகுத்தது.
ஆனால் இறுதியில், பிரெஞ்சு இடதுகளின் கூட்டணி தீவிர வலதுசாரி எழுச்சியைத் தோற்கடித்து பெரும்பாலான இடங்களை கைப்பற்றியுள்ளது.
இதன் விளைவு பிரான்ஸ் ஒரு தொங்கு பாராளுமன்றத்தையும் அரசியல் முடக்கத்தையும் எதிர்கொள்கிறது.
மேலும் பல ஆண்டுகளாக பிரான்சில் நடந்த மிக முக்கியமான தேர்தலில் முடிவுகள் வெளிவந்ததால், பாரிஸில் தீப்பொறிகள் காட்டுத்தீப்போல் பரவி மோதலுக்கு வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.