ஐரோப்பா

சிரிய ஆட்சியின் வியத்தகு வீழ்ச்சி : அச்சத்தில் புட்டின்!

சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் சிரிய ஆட்சியின் வியத்தகு வீழ்ச்சி மற்றும் மாஸ்கோவிற்கு அவர் பறந்தது விளாடிமிர் புடினுக்கு “மூலோபாய அரசியல் தோல்வி” ஆகும் என புதிய சிந்தனை குழு கருத்துரைத்துள்ளது.

இது ஒரு தீவிர வெளியுறவுக் கொள்கை தோல்வி என்று கருதப்படுவதாகவும், புட்டினும் தனக்கும் இந்த நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக கவலைப்படுவதாகவும் அக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டனை தளமாகக் கொண்ட ஆய்வு நிறுவனம் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளது.

ரஷ்யாவிற்கு அவரது வருகை புடினால் தனிப்பட்ட முறையில் அனுமதிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது, இது இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று கூட்டணியை எடுத்துக்காட்டுகிறது.

மத்திய கிழக்கில் தனது செல்வாக்கை உறுதிப்படுத்தும் முயற்சியில் இராணுவத் தலையீடுகள் மற்றும் பொருளாதார உதவிகள் மூலம் அசாத்தை ரஷ்யா முட்டுக் கொடுத்ததாகவும் இது இப்போது ஆபத்தில் இருப்பதாகவும் அக்குழு குறிப்பிட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!