செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் – ஜெர்மனியில் வேலையை இழக்கும் 4000 பேர்!
செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் உறுப்பினர் விமான நிறுவனங்களிடையே ஒருங்கிணைப்பு பணிகளைப் பயன்படுத்தி 2030 ஆம் ஆண்டுக்குள் 4000 வேலைகளை நீக்கப் போவதாக லுஃப்தான்சா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜெர்மனியில் இயங்கி வரும் இந்நிறுவனமானது செயல்பாட்டுப் பணிகளை விட நிர்வாகத்தில் கவனம் செலுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக லுஃப்தான்சா, சுவிஸ், ஆஸ்திரிய ஏர்லைன்ஸ், பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் மற்றும் ஐடிஏ ஏர்வேஸ் ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை ஆழப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளது.
இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் “கணிசமாக அதிகரித்த லாபத்தை” எதிர்பார்ப்பதாக அறிவித்துள்ள நிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.





