முடிவுக்கு வரும் டொலரின் ஆட்சி, அரியணை ஏறும் தங்கம்!!
சர்வதேச நாணய அலகான டொலர் வரும் காலங்களில் தனது மேலாதீக்கத்தை இழக்கக்கூடும் எனவும், அதற்கு மாற்றீடாக தங்கம் முதலிடத்தை வகிக்கும் என்றும் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் பீட்டர் ஷிஃப் (Peter Schiff) தெரிவித்துள்ளார்.
டொலரின் ஆட்சி வீழ்ச்சிக்கு வந்து தங்கம் அரியணை ஏறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கிங் டொலரின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. தங்கம் முதன்மை மத்திய வங்கி இருப்பு சொத்தாக அரியணை ஏறும். அதாவது அமெரிக்க டொலர் மற்ற ஃபியட் நாணயங்களுக்கு எதிராக சரியும். ஒரு வரலாற்று பொருளாதார சரிவுக்கு தயாராகுங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பீட்டர் ஷிஃபின் (Peter Schiff) கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் வகையில் மற்ற பொருளாதார நிபுணர்களும் டொலரின் வீழ்ச்சி குறித்து எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விலைமதிப்பற்ற உலோகங்களின் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நேரத்தில் அவரது எச்சரிக்கை வந்துள்ளது.





