அமெரிக்காவில் அடுப்பைப் பற்றவைத்து பரபரப்பை ஏற்படுத்திய நாய்

அமெரிக்காவின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் நகரில் நாய் ஒன்று தற்செயலாக அடுப்பைப் பற்றவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் வெளியான காணொளியில் நாய் அடுப்பைப் பற்றவைக்கும் காட்சி தெரிகிறது.
அதன் பின் அவ்விடத்தைவிட்டு அது சென்றது. சில வினாடிகளில் அடுப்பிலிருந்த பொருள்கள் தீப்பற்றுவது காணொளியில் தெரிகிறது.
வீட்டில் அளவுக்கு அதிகமான அனல் குறித்த எச்சரிக்கை வீட்டு உரிமையாளர்களின் HomePod சாதனத்தில் கிடைத்துள்ளது.
அதனால் அவர்களால் தீயணைப்பாளர்கள் வருவதற்கு முன் தீயை அணைக்க முடிந்தது. வீட்டு உரிமையாளர் அதிக அளவில் புகையை நுகர்ந்ததால் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மற்ற மனிதர்களுக்கோ விலங்குகளுக்கோ காயங்கள் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
(Visited 9 times, 1 visits today)