தேசிய மக்கள் சக்தியின் வீழ்ச்சி ஆரம்பம் – அரசாங்கத்திற்கு சவால் விடுத்த எம்.பி
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வீழ்ச்சிப் பயணம் ஆரம்பித்துவிட்டதாகவும், கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள் இதனை உறுதிப்படுத்துவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (10) நடைபெற்ற வரவு – செலவுத் திட்டத்தின் 2ஆம் வாசிப்புமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவருகின்றது. எனினும், தேர்தல் நடத்தப்படுமா என்பது சந்தேகமே.
ஏனெனில் அரசாங்கத்தின் வீழச்;சி ஆரம்பமாகியுள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் முடிவுகள் இதனை வெளிப்படுத்துகின்றன. அத்தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி அடைந்துவருகின்றது.
முடிந்தால் மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு சவால் விடுக்கின்றோம். அவ்வாறு நடத்தினால் அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள நிலைப்பாடு சிறப்பாக தெரியவரும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டார்





