இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ இருப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி!
இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய தரவு அறிக்கைகளின்படி, இலங்கை மத்திய வங்கியின் அதிகாரப்பூர்வ இருப்பு சொத்துக்கள் ஏப்ரல் 2025 இறுதியில் 6.32 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைந்துள்ளன.
இது மார்ச் 2025 இல் பதிவான $6.53 பில்லியனுடன் ஒப்பிடும்போது 3% குறைவு ஆகும்.
இதேவேளை 2024 ஆம் ஆண்டில், மத்திய வங்கி, ஆண்டுக்கு ஆண்டு (YoY) முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 14.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
நான்காவது காலாண்டின் இறுதியில், புழக்கத்தில் உள்ள மொத்த நாணயம், தொற்றுநோய்க்குப் பிந்தைய புதிய உச்சமான ரூ.1.36 டிரில்லியனை எட்டியமை குறிப்பிடத்தக்கது.





