திறைசேரி உண்டியல்களின் கடன் உச்சவரம்பு ஆறு டிரில்லியன் ரூபாயாக உயர்த்தப்படுகிறது
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடன்படிக்கைகளை தொடர்ச்சியான புரிந்துணர்வு மூலம் மேலும் வெற்றியடையச் செய்ய முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியக் குழுவின் தற்போதைய இலங்கை விஜயம் அதற்கான சிறந்த சந்தர்ப்பமாக அமைவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளுக்கான இலங்கையின் அர்ப்பணிப்பு முன்னேற்ற மீளாய்வுக்கு முன்னர் கண்காணிக்கப்படும் என அமைச்சர் குறிப்பிடுகிறார்.
இதேவேளை, பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையானது கடன் வரம்பை அதிகரிக்காது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தற்போது 5000 பில்லியன் ரூபா என்ற வரம்பில் உள்ள அரசாங்கம் திறைசேரி உண்டியல்கள் மூலம் பெறக்கூடிய கடன் வரம்பை 6000 ரூபாவாக அதிகரிக்கவே முடியும் என அமைச்சர் சியம்பலாபிட்டிய கூறுகிறார்.
திறைசேரி உண்டியல்களில் இருந்து கடன் பெறுவதற்கான வரம்புகளை அதிகரிப்பது நன்மை பயக்கும் என அவர் சுட்டிக்காட்டுகிறார், இது அதிக வட்டி விகிதங்களின் நிலைமைகளின் கீழ் உள்நாட்டில் குறுகிய கால கடன்களை அரசாங்கம் பெற முடியும்.