இலங்கையின் ஜனநாயகத்திற்கு விழுந்த மரண அடி : உள்ளுராட்சி தேர்தல் குறித்து மகிந்த தேசப்பிரிய விமர்சனம்!
இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவதில் எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று அந்தக் குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளை நியமிக்காமல் அதிகாரவர்க்க கட்டுப்பாட்டின் கீழ் மாகாண சபைகளை தொடர்ந்தும் நடத்துவது நாட்டின் ஜனநாயகத்திற்கு மரண அடி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மஹிந்த தேசப்பிரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை அரசியலமைப்பில் திருத்தம் செய்வதைத் தவிர வேறு எந்த வகையிலும் பிற்போடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் கூறினார்.
“ஜனாதிபதித் தேர்தலை விரைவில் நடத்த முடியாது. அதேநேரம் தாமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.