வீட்டின் கூரையில் இருந்து மீட்கப்பட்ட சடலம்

தனது வீட்டின் மேற்கூரை ஓடுகளை தயார் செய்வதற்காக ஏறிய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை பின்வத்த பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் நீண்ட நேரமாகியும் கூரையில் இருந்து கீழே வராததால், அப்பகுதியினர் தேடியபோது இறந்து கிடந்ததை கண்டனர்.
இதையடுத்து அவரது மகன் கூரையின் மீது ஏறி தேடியபோது, தந்தை இறந்து கிடந்தது தெரியவந்த நிலையில், இது குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், வீட்டின் பல பகுதிகள் ஈரமாக இருந்ததால், மேற்கூரையில் ஏறி சரி செய்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சம்பவம் தொடர்பில் பின்வத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 8 times, 1 visits today)