இலங்கையில் யுக்திய நடவடிக்கை முடிவுக்கு வரும் நாள் – பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் பாதாள உலகமும் போதைப்பொருள் கடத்தலும் ஒழிக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் உணரும் போதே யுக்திய நடவடிக்கை முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், யுக்திய நடவடிக்கைகளை பாதியில் நிறுத்தினால், மீண்டும் பழைய நிலையே ஏற்படக்கூடும்.
அதனை சரியான புரிதலுடன் கையாள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதாள உலகத்துடன் தொடர்பில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 15 times, 1 visits today)