வட அமெரிக்கா

கனடாவில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை!

கனடாவில் காட்டுத் தீச்சம்பவங்கள் திடீரென அதிகரித்துள்ளமையினால் அவற்றைச் சமாளிக்க அதிகாரிகள் திண்டாடுகின்றனர்.

மேற்குப் பகுதியில் வெப்பமான, வறண்ட வானிலை அடுத்த வாரமும் தொடரும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. மேற்கில் உள்ள அல்பேர்ட்டா (Alberta) மாநிலத்தில் ஒரே வாரத்தில் நூற்றுக்கும் அதிகமான பகுதிகளில் காட்டுத் தீச்சம்பவங்கள் நேர்ந்துள்ளன.

அந்த வட்டாரத்தில் சிறப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சில பகுதிகளில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை எட்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வருடத்தின் இந்தக் காலத்தில் பொதுவாக நிலவும் தட்ப, வெப்பநிலையைவிட அது 10 முதல் 15 டிகிரி செல்சியஸ் அதிகம். நிலைமை எந்நேரமும் மாறலாம்.

அதனால் அங்கிருந்து வெளியேறத் தயாராக இருக்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 30 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேறிவிட்டனர்.

அந்த வட்டாரத்தைச் சூழ்ந்திருக்கும் கடும் வெப்பத்தால் எரிசக்தி உற்பத்தியும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!