தூக்கமின்மை பாதிப்புக்கு மாத்திரை பயன்படுத்துபவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
தூக்கமின்மை பாதிப்புக்காக பொதுவாக பரிந்துரைக்கப்படும் மெலடோனின் மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் நாள்பட்ட தூக்கமின்மை மற்றும் இதயச் செயலிழப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உயிரிழப்புக்கான ஆபத்தும், நீண்டநாள் உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடிய வாய்ப்பும் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
தூக்கமின்மை பாதிப்பால் அவதிப்படுபவர்களில், மெலடோனின் சப்ளிமெண்ட் பயன்படுத்தாதவர்களைவிட, அதைப் பயன்படுத்துபவர்களுக்கு ஐந்து ஆண்டுகளில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 90 சதவீதம் அதிகமாக உள்ளது என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மூன்றரை மடங்குக்கும் அதிகமாக இதயச் செயலிழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளதாகவும் கூறப்படுகிறது.





