ஜெர்மனிக்கு காத்திருக்கும் ஆபத்து – அச்சத்தில் அதிகாரிகள்
ஜெர்மனியில் ஆற்றில் நீர் மட்டம் குறைவடைந்து வருவதாக அச்சம் வெளியாகி இருக்கின்றது.
ஜெர்மனியில் நதிகளில் நீர் வற்றி செல்வதாக ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் நாடு கடும் பாதிப்பு நிலைக்கு செல்லும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ள நிலையில் அதனை தடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதாவது பொடன்சே என்று சொல்லப்படுகின்ற மிக பெரிய ஆற்றில் நீரின் அளவானது மேலும் குறைவடைந்து செல்வதாக தெரியவந்துள்ளது.
இதேவேளையில் உலகளாவிய ரீதியில் சுவிஸ் வொசர் என்று சொல்லப்படுகின்ற நன்னீர் ஆனது 3 சதவீதமே உள்ளதாக தெரியவந்துள்ளது.
2050 ஆம் ஆண்டில் இந்த நன்னீர் 35 சதவீதமான நீர் வற்றிப்போக கூடிய அபாயம் உள்ளதாக விஞ்ஞான சஞ்சிகையானது தெரிவித்து இருக்கின்றது.
உலகளாவிய ரீதியில் நன்னீர்களில் 90 சதவீதமான நன்னீர் நதிகளில் காணப்படுகின்றுது.
இதனடிப்படையில் எதிர் வரும் காலங்களில் குடிப்பதற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என அச்சங்கள் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டில் இந்த விடயம் பெரும் அபாயத்தை ஏற்படுத்த கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது.