ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள ஆபத்து – பாதுகாப்பற்ற நிலையில் மக்கள்
ஜெர்மனிய நாட்டில் அதிகரித்து வருகின்ற கத்தி குத்து சம்பவங்கள் தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஜெர்மனியில் கத்தி குத்து சம்பவங்கள் பாரிய அளவில் அதிகரித்து காணப்படுகின்றது.
இந்நிலையில் அண்மை காலங்களில் இவ்வாறு கத்தி குத்து தாக்குதல் சம்பவங்களால் பலியாகியவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து காணப்படுகின்றது.
அதாவது பொது வெளியில் மக்கள் பணிப்பதற்கு பாதுகாப்பான சூழல் இல்லை என்ற கருத்து தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணத்தனால் நோற்றின்பிஸ்பாளின் மாநிலத்தில் உள்ள பிரதான எதிர்கட்சியான எஸ்பிடி கட்சி யானது பாராளுமன்றத்தில் ஒரு வேண்டுதலை விடுத்து இருக்கின்றது.
அதாவது பொது வெளிகளில் இவ்வாறு கத்திகளை கொண்டு செல்வதை தடை செய்ய வேண்டும் என்று இந்த எதிர் கட்சியானது தனது கோரிக்கையை முன்வைத்துள்ளது.
நோற்றின்பிஸ்பாளின் மாநிலத்தில் மட்டும் 2019 ஆம் ஆண்டு 4190 இவ்வகையான கத்தி குத்து சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாகவும், இதில் 140 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது.
அதாவது 2020 ஆம் ஆண்டு 2021 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையானது அதிகரித்து உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.