அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – லொஸ் ஏஞ்சலிஸில் தண்ணீர் பற்றாக்குறையால் தவிப்பு
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸில் காட்டுத் தீ ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காட்டுத் தீ ஏற்பட்டது.
இந்தநிலையில் பலத்த காற்று காற்று காரணமாகக் காட்டுத் தீ வேகமாகப் பரவியது. இதனையடுத்து 4 லட்சம் பேர் வரையில் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தீயை கட்டுப்படுத்த முடியாத சூழல் நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் காட்டுத்தீயினால் இதுவரையில் 11 பேர் உயிரிழந்ததுடன் 10,000க்கும் மேற்பட்ட வீடுகளும், கட்டடங்களும் தீக்கிரையாகியுள்ளன.