ஜெர்மனியில் புகலிடம் பெற போலி ஆவணங்கள் சமர்ப்பித்தவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து
ஜெர்மனியில் போலியான தகவல்களை வழங்கி புகலிடம் பெற்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜெர்மனி அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
ஜெர்மன் அரசாங்கம் வழங்கும் பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொள்ளும் பெருமளவான இளைஞர், யுவதிகள் போலியான தகவல்களை வழங்கி அகதி அந்தஸ்து கோரியுள்ளனர்.
அகதி விண்ணப்பத்தின் போது தங்களது வயது, பெயர் மற்றும் பிறந்த திகதி போன்ற விடயங்களில் மாற்றங்களை மேற்கொள்ளப்பட்டு ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பாடன்புட்டன் மாநிலத்தில் பல இளைஞர் யுவதிகள் தங்களது வயதை குறைத்து காட்டி அகதி விண்ணப்பம் மேற்கொண்டதாக அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சோதணையின் போது பாடன் புட்டன் மாநிலத்தில் 150 பேர் போலியான முறையில் அவர்களின் வயதினை குறிப்பிட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலங்களில் பெற்றோர்கள் இல்லாத வயது குறைந்தவர்கள் அகதி விண்ணப்பம் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தமது வயதை குறைத்து போலியான ஆவணங்கள் வழங்கியுள்ளனர். தற்போது அவர்களின் அகதி கோரிக்கைகள் மீளவும் ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வயது குறைவானர்களுக்கு கிடைக்கும் பல்வேறு சலுகைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.