குளிர்காலத்தில் பிரித்தானிய மக்களுக்கு காத்திருக்கும் நெருக்கடி : எரிவாயு விலை உயர்வு!

இந்த குளிர்காலத்தில் எரிசக்தி கட்டணம் 9% உயரும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான விலை வரம்பு சராசரி பயனருக்கு ஆண்டுக்கு £1,714 வரை உயரும் என்று கார்ன்வால் இன்சைட் கூறுகிறது.
இது தற்போதைய கட்டணத்தில் இருந்து £146 உயர்வாக இருக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதன்படி ஒரு யூனிட் எரிவாயு மற்றும் மின்சாரத்திற்கு நீங்கள் எவ்வளவு செலுத்துகிறீர்கள் என்பதைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சராசரி பில்லை உருவாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
(Visited 13 times, 1 visits today)