இலங்கையில் வைத்திய துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை : 1000 பேர் இராஜினாமா!
இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் மருத்துவர்கள் இராஜினாமா செய்துள்ளதாக கோபா குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவுகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய செயற்பாடுகள் குறித்து ஆராய கோபா குழு கூடியபோதே டொக்டர் ஜி.விஜேசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், 05 வருட விடுப்பு மற்றும் வெளிநாடு சென்றமை, சேவையில் இருந்து விலகல், முன்னறிவிப்பின்றி ராஜினாமா செய்தல் மற்றும் குறிப்பிட்ட சேவைக் காலம் முடிந்து ஓய்வு பெறுதல் போன்ற காரணங்களால் இந்த வருடம் 957 வைத்தியர்கள் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் சில சிகிச்சை பிரிவுகளில் 24 மணி நேர சேவைகளை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
(Visited 5 times, 1 visits today)