இலங்கை வந்த ஈரான் ஜனாதிபதியின் விமானத்தால் ஏற்பட்ட நெருக்கடி நிலை
இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு ஈரான் சென்ற ஈரான் ஜனாதிபதியின் விமானம் புறப்பட திரும்பிய நிலையில் முப்பது நிமிடங்களுக்கு மேல் பயணிக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்டதால் மூன்று சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதி பயணித்த விமானம் ஏ2 முனையத்தின் நடுவே நிறுத்தப்பட்டிருந்தமையினால், கட்டுநாயக்க விமான தளத்தில் தரையிறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், தாய் ஏர்லைன்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் விமானம் ஆகியன முனையத்திற்குள் செல்ல முடியாமல் தவித்தமையே இதற்குக் காரணமாகும்.
தனது விமானம் ஓடுபாதையில் சரியான நேரத்தில் வந்து 35 நிமிடங்கள் காத்திருக்க நேரிட்டதற்கு விமான நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அப்போது, பாதுகாப்பு காரணங்களால் ஈரான் ஜனாதிபதியின் விமானம் திடீரென நிறுத்தப்பட்டதாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்குச் சொந்தமான Arkia Airlines இன் IZ 639 என்ற விமானம் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த விமான சேவைக்கு சொந்தமான விமானங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்ட போதிலும், நேற்றுமுன்தினம் இரவு 8.50 மணியளவில் கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் கட்டுநாயக்கவை வந்தடைந்தது.
குறித்த விமானம் இந்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பின்னர், ஈரான் ஜனாதிபதியின் விமானம் இரவு 11.30 மணியளவில் கடுமையான பாதுகாப்புக்கு மத்தியில் புறப்படத் தயாரானது.
ஓடுபாதைக்கு செல்ல எடுத்த பின்னர் விமானம் அரை மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு வான் பாதுகாப்பு அமைப்பை செயல்படுத்தியதை அடுத்து ஈரான் ஜனாதிபதியை ஏற்றிய விமானம் ஈரானுக்கு புறப்பட்டது.