மனைவி மீது பொய் குற்றச்சாட்டு… பாகிஸ்தானியருக்கு 80 கசையடிகளை வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வசித்து வந்தவர் பரீத் காதர். கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது மனைவியை விவாகரத்து செய்தார்.
இந்த நிலையில் இவர் தனது குழந்தைகளுக்கு தான் தந்தை இல்லை என மனைவி மீது குற்றம்சாட்டினார். இதுகுறித்து அவர் பொலிஸில் புகார் செய்தார்.
பின்னர் மேற்கொண்ட சோதனையில் அவர்கள் பரீத் காதரின் குழந்தைகள் என்பது உறுதியானது.
இதனையடுத்து முன்னாள் மனைவி மீது அபத்தமாக பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக நூதன தண்டனை வழங்க கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி பரீத் காதருக்கு 80 கசையடிகளை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
(Visited 17 times, 1 visits today)