இலங்கை செய்தி

நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு 07 பில்லியனை கடந்தது

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி, 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதன் முறையாக 7,000 மில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடந்துள்ளது.

அண்மைக்கால தரவு அறிக்கைகளின்படி, 2026 பெப்ரவரி மாத இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 7,284 மில்லியன் டொலர்களாகக் காணப்பட்டது.

இது 2026 ஜனவரி மாதத்தில் காணப்பட்ட 6,832 மில்லியன் டொலர் கையிருப்புடன் ஒப்பிடுகையில் 6.6 சதவீத அதிகரிப்பாகும்.

வெளிநாட்டு செலாவணி கையிருப்பு, 2026 பெப்ரவரி மாதத்தில் 6,687 மில்லியன் டொலர்களிலிருந்து 7,057 மில்லியன் டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியிடமுள்ள தங்க கையிருப்பு 2026 பெப்ரவரி மாதத்தில் 109 மில்லியன் டொலர்களிலிருந்து 200 மில்லியன் டொலர்கள் வரை 83.4 சதவீதத்தினால் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியடைந்துள்ளது

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!