எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: அரசு விளக்கம்!
நாட்டில் தேவையானளவு எரிபொருள் உள்ளது. எனவே, தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ளவேண்டாம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (2) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa மேற்கண்டவாறு கூறினார்.
“ நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வீண் அச்சத்தால் மக்கள் எரிபொருள் சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். அவ்வாறு அச்சம் கொள்ள தேவை இல்லை.
தேவையானளவு எரிபொருள் இருப்பில் உள்ளது. எமது கப்பல்கள் மத்திய கிழக்கு ஊடாக அல்ல, வேறு வழிகளில்தான் வருகின்றன. எனவே, விநியோகம் பாதிக்கப்படமாட்டாது. “ எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.




