பிரித்தானியாவில் 30 நகரங்களுக்கு 20 மில்லியன் பவுண்டுகளை வழங்கும் கன்சர்வேட்டிவ் கட்சி!

கன்சர்வேடிவ்கள் நாடு முழுவதும் உள்ள 30 நகரங்களுக்கு 20 மில்லியன் பவுண்டுகள் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையை தொழிலாளர் கட்சி “பொறுப்பற்ற, நிதியில்லாத அர்ப்பணிப்பு” என்று முத்திரை குத்தியுள்ளது.
ரிஷி சுனக்கின் கட்சியானது, மிட்லாண்ட்ஸ் மற்றும் வடக்கில் உள்ள நகரங்களுக்கு குறித்த நிதியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
ஒவ்வொரு பகுதியிலும் உள்ள உள்ளூர் மக்கள், சமூகத் தலைவர்கள், வணிகர்கள், உள்ளூர் அரசாங்கம் மற்றும் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதிய நகர வாரியங்கள் இந்த பணத்தை எவ்வாறு செலவு செய்வார்கள் என்பதை தீர்மானிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 18 times, 1 visits today)