இலங்கை : முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இரத்து செய்யக் கூடாது – ரணில்!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை ரத்து செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தனக்கு எந்தவித சலுகைகளும் தேவையில்லை எனவும் ஏனைய ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஜனாதிபதிகளின் வீடுகள் அகற்றப்படுகின்றன.எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. நான் வீட்டில் வசிக்கவில்லை. ஆனால் எதற்காக சந்திரிகா மேடத்தை நீக்குகிறார்கள். அந்த வீட்டை மட்டும் அவருக்கு கொடுங்கள்” எனக் கூறியுள்ளார்.
(Visited 34 times, 1 visits today)