அரசியல்,கல்வி உள்ளிட்ட துறைகளில் சீன அரசு கொண்டுவந்துள்ள அதிரடி மாற்றம்!

சீனாவை வடிவமைக்க அந்நாட்டு அரசு வித்தியாசமான வழிமுறைகளை கையாள்கிறது.
அரசு இயந்திரத்தையும், அரசியல் கட்சிகள் மற்றும் வணிகர்களையும் இணைத்து ஆலோசனைகளை மேற்கொள்வதுதான் அந்த வித்தியாசமான வழிமுறை.
இந்த நிகழ்வுக்கு ‘இரண்டு அமர்வுகள்’ (Two Sessions) என்று பெயர்.
1. தேசிய மக்கள் காங்கிரஸ்
2. சீன மக்கள் அரசியல் ஆலோசனை குழு
முதலில் உள்ள ‘தேசிய மக்கள் காங்கிரஸில்’ நாடு முழுவதும் இருந்து 3000 பிரதிநிதிகள் இடம்பெற்றிருப்பார்கள்.
புதிய சட்டம், சட்ட திருத்தம், திட்டங்கள், வேலை அறிக்கை, பொருளாதார திட்டம் உள்ளிட்டவை இங்குதான் தீர்மானிக்கப்படும்/நிறைவேற்றப்படும். இதற்கு பிரதிநிதிகள் வாக்களிப்பார்கள். பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் சட்டங்கள் நிறைவேற்றப்படும்.
இரண்டாவதாக உள்ள சீன மக்கள் அரசியல் ஆலோசனை மாநாடு (CPPCC) பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இருப்பார்கள். தவிர வணிகர்கள், கல்வியாளர்கள், சமூக குழுக்களை சேர்ந்தவர்களும் இருப்பார்கள்.
யதார்த்த சூழலில் நாடு வளர்ச்சியை எட்ட என்ன தேவைப்படுகிறது? அரசு எந்த மாதிரியான மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்பது குறித்து இந்த குழு பரிந்துரைக்கும்.
சமீபத்தில் இந்த இரண்டு குழுவின் கூட்டம் நடைபெற்றது. அதில் சீன இளைஞர்களின் திறனை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று பேசப்பட்டிருக்கிறது.
Chat GPT க்கு மாற்றாக சீனா Deepseekஐ கொண்டு வந்திருக்கிறது. ஆனால் பல துறைகளில் இதுபோன்ற சிறந்த கண்டுபிடிப்புகளை கொடுக்க வேண்டிய தேவை தற்போது அந்நாட்டுக்கு எழுந்திருக்கிறது. எனவே, CPPCC குழுவினர் இது தொடர்பாக அறிவுறுத்தல்களை கொடுத்திருக்கின்றனர்.
இதனையடுத்து பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை கொடுத்து கல்வி முறையை மாற்றி அமைப்பது என சீன அரசு முடிவெடுத்திருக்கிறது.