தன்னிச்சையாக ஆயிரக்கணக்கானவர்களை கைது செய்துள்ள சீன அரசாங்கம் – வாஸிங்டன் வெளியிட்ட தகவல்!

கடந்த ஆறு ஆண்டுகளில் சீனா தன்னிச்சையாக ஆயிரக்கணக்கானவர்களைக் கைது செய்துள்ளனர்.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களாக” வகைப்படுத்தக்கூடிய குற்றங்களுக்காக 1,545 கைதுகள் இடம்பெற்றுள்ளதாக உரிமைக் குழு குற்றம் சாட்டியது.
“மனித உரிமைகளை அமைதியாகப் பயன்படுத்தியதற்காக அல்லது வாதிட்டதற்காக” கைதிகள் சிறையில் அடைக்கப்பட்டதாக சீன மனித உரிமைகள் பாதுகாவலர்கள் ஓர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு சராசரியாக ஆறு ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது என்று அது கூறியது.
“சீன அரசாங்கத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் கடமைகளுக்கு இணங்காத சட்டங்களிலிருந்து எழும் குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்” என்று வாஷிங்டன் டிசியை தலைமையிடமாகக் கொண்ட குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.