2030ஆம் ஆண்டிற்குள் உலக மின்சாரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
உலகளவில் 2030ஆம் ஆண்டிற்குள் மின்சாரத்தில் மாற்றம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உலகளவில் சுமார் 50 சதவீதம் குறைவான கரியமில வாயுவை வெளியேற்றக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை எரிசக்தித் திட்டங்களுக்கு ஆண்டுக்கு சுமார் 2 டிரில்லியன் டொலர் முதலீடு செய்யப்படுகிறது.
படிம எரிபொருள் திட்டங்களுக்கான முதலீட்டைப் போல் அது இரண்டு மடங்கு என்று அனைத்துலக எரிசக்தி அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு இதுவரை இல்லாத அளவில் பசுமை எரிசக்தி வளங்கள் அதிகரித்ததாக அது கூறியது.
2030ஆம் ஆண்டிற்குள் படிம எரிபொருளின் இருப்பு அதன் தேவையைவிட அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
எனினும் உலகில் குறிப்பிட்ட இடங்களில் எண்ணெய், எரிவாயு, கரி ஆகியவற்றுக்கான தேவை இன்னும் குறையவில்லை.
2030ஆம் ஆண்டில் அவற்றின் தேவை உச்சத்தை எட்டி, குறையத் தொடங்கிவிடும் என்று அனைத்துலக எரிசக்தி அமைப்பு நம்புகிறது.