மீனின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

சந்தையில் அதிகரித்திருந்த மீனின் விலை குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தில் தலைவர் டீ பி உபுல் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய லின்னன் மீன் ஒரு கிலோகிராம் 400 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோகிராம் கெலவல்லா 1100 ரூபாவிற்கும், பலயா 700 ரூபாவிற்கும் கனவா 700 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
(Visited 11 times, 1 visits today)