இலங்கை

இலங்கையில் கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

சந்தையில் ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலையை இன்று (12.12) முதல் உயர்த்த கோழி மொத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கோழி இறைச்சியை  30-50 ரூபாவால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சில விற்பனையாளர்கள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் விலை திருத்தத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய விலையின் கீழ் ஒரு கிலோ கோழி இறைச்சியானது 1250 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முட்டை ஒன்றின் விலையும் 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்றவாறு வரத்து இல்லாததால் முட்டை விலை அதிகரித்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!