இலங்கையின் வருடாந்த பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
இலங்கையில் சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் படி, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் இலங்கையில் வருடாந்த பணவீக்கம் செப்டம்பர் 2024 இல் -0.2% ஆகக் குறைந்துள்ளது.
ஆகஸ்டில் இது 1.1% ஆக பதிவானது. ஆகஸ்ட் 2024 இல் 2.3% ஆக இருந்த உணவு வகை பணவீக்கம் செப்டம்பர் 2024 இல் 0.5% ஆக குறைந்துள்ளது.
மேலும், உணவு அல்லாத வகையின் புள்ளி பணவீக்கம் ஆகஸ்ட் 2024 இல் 0.2% இலிருந்து செப்டம்பர் 2024 இல் -0.7% ஆகக் குறைந்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)