ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டவர்களால் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகையில் சுமார் 430,000 பேர் மேலதிகமாக இணைந்துள்ளனர்.

2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு குடியேற்றத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. புதிதாக குடியேறியவர்களின் எண்ணிக்கை 370,000 ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இயற்கை பிறப்பு விகிதம் 89,500 ஆகவும், உள்நாட்டில் இடம்பெயர்வு அதிகரிப்பு 34,600 ஆகவும் உள்ளது.

மெல்போர்ன் நகரில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அது 3.1 சதவீத அதிகரிப்பு அல்லது 142,600 அதிகரிப்பு என்று புள்ளிவிவர அறிக்கை தெரிவித்துள்ளது.

இரண்டாவது பெரிய மக்கள்தொகை அதிகரிப்பு சிட்னி பெருநகரப் பகுதியில் ஏற்பட்டது, இது 107,500 ஆகும்.

பெர்த் மற்றும் பிரிஸ்பேனின் மக்கள் தொகை சுமார் 73,000 அதிகரித்துள்ளது.

(Visited 48 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி