30 நிமிடங்கள் செலவிட்டால் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றம்
நிம்மதியான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உடல் மிக அவசியமாகும். ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான உணவுப் பழக்கமும், வாழ்க்கை முறையும் மிக அவசியம். சீரான வாழ்க்கை முறையில் உடல் செயல்பாடுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.
காலையில் பல வகையான உடற்பயிற்சிகளை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதில் ஜாகிங்கும் அடங்கும். மெதுவான வேகத்தில் சீராக நாம் மேற்கொள்ளும் ஓட்டத்தை ஜாகிங் என கூறுகிறோம். இந்த கார்டியீவேஸ்குலர் செயல்பாடு உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ஜாகிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள் என்ன? எவ்வளவு நேரம் ஜாக் செய்ய வேண்டும்? இந்த பதிவில் இதை பற்றி பார்க்கலாம்.
தூங்கி எழுந்தவுடன் தினமும் அரை மணி நேரம் ஜாக் செய்வது பல வித நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகின்றது.
30 நிமிடங்கள் ஜாகிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
தினமும் தவறாமல் ஜாக் செய்தால், இதயம் மற்றும் நுரையீரல் சீராக செயல்படும். ஏனெனில் இந்த உடற்பயிற்சி இருதய அமைப்பை பலப்படுத்துகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு இதய தசைகளையும் பலப்படுத்துகிறது.
Weight Loss: எடை இழப்பில் உதவும்
ஜாகிங் கலோரிகளை எரிக்கவும் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் ஒரு சிறந்த வழியாகும். தினசரி 30 நிமிடங்களுக்கு மிதமான வேகத்தில் ஓடுவது உடல் எடை குறைக்க பெரிய அளவில் உதவும். இது உடல் எடை மற்றும் மற்றும் உடலின் ஆரோக்கிய நிலை போன்ற காரணிகளைப் பொறுத்து சுமார் 300-400 கலோரிகளை எரிக்க உதவும். ஜாகிங் செய்யும் போது நம் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் செயல்படுகின்றன. ஆகையால், இதன் மூலம் கூடுதல் கொழுப்பை எரிப்பதிலும், கலோரிகளை வேகமாக எரிப்பதிலும் பெரிய அளவில் உதவி கிடைக்கின்றது.
Stress Relief: மனநலம் மேம்படும்
ஜாகிங் பல மனநல நன்மைகளைக் கொண்டுள்ளது. இது மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவும். ஜாகிங் எண்டோர்பின்களை வெளியிடுகிறது. இவை பெரும்பாலும் ‘ஃபீல்-குட்’ ஹார்மோன்கள் என்று அழைக்கப்படுகின்றன. இது மனநிலையை மேம்படுத்தவும் சிறந்த தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவும்.
Immunity: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
தொடர்ந்து ஜாகிங் செய்வதன் மூலம், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். ஜாகிங் செய்வது ஆன்டிபாடிகள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை மேம்படுத்துகிறது. இது பல வகையான தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதன் காரணமாக காய்ச்சல், சளி, இருமல் மற்றும் சளி போன்றவை ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம்.