ஆசியா செய்தி

சிங்கப்பூரில் ஆண் – பெண்கள் இடையேயான வருமானத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

சிங்கப்பூரில் ஆண் – பெண்கள் இடையேயான வருமானத்தின் இடைவெளியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைக்குப் பிறகு பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றிக் கூறும் முதல் அறிக்கை இதுவாகும்.

வெள்ளை அறிக்கை 25 செயல் திட்டங்களை முன்வைத்தது. வேலையிடங்களில் பெண்களுக்குச் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவது அவற்றில் ஒன்று.

பல துறைகளிலும் பெண்கள் தலைமைத்துவப் பொறுப்புக்கு வரும் விகிதம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளதாகஅறிக்கை குறிப்பிட்டது.

சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ள ஆகப்பெரிய 100 நிறுவனங்களில் பெண்கள் தலைமைத்துவப் பொறுப்பில் இருக்கும் விகிதத்தை உயர்த்த அரசாங்கம் விரும்புகிறது.

2025ஆம் ஆண்டுக்குள் அந்த விகிதத்தை 25 சதவீதம்உயர்த்த திட்டமிடுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!