இலங்கையில் மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
இலங்கையில் மே மாதத்தில் மின் கட்டணத்தை குறைப்பதற்கான வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்சக்தி – எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த இதனை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மே மாதத்தில் மற்றுமொரு கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதுவரை திரட்டிய தரவுகளை இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
(Visited 24 times, 1 visits today)





