அமெரிக்காவில் 3 ஆண்டுகளின் பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றம்!

அமெரிக்காவில் பணவீக்கம் 3 ஆண்டில் மிகக் குறைவான விகிதத்தை எட்டியுள்ளது.
அடுத்த வாரம், வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கு வகைசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமெரிக்க மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி, 2020ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக வட்டி விகிதத்தைக் குறைக்கவிருக்கிறது.
ஒகஸ்ட் மாதத்தில் பயனீட்டாளர் விலைக் குறியீடு இரண்டரை விழுக்காடு உயர்ந்தது. எரிவாயு விலை குறைந்தது அதற்குக் காரணம்.
உணவு, எரிசக்தி போன்ற ஏற்ற இறக்கம் கொண்ட பொருள்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஆண்டு அடிப்படையில் விலையேற்றம், மூன்று சதவீதத்தை சற்று அதிகமாகும்.
அடுத்த வாரம் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்றே பரவலாக நம்பப்படுகிறது. எவ்வளவு குறைக்கப்படும் என்பதுதான் கேள்வியாகும்.
(Visited 40 times, 1 visits today)