அமெரிக்காவின் ஜனாதிபதியாகிய டிரம்ப் மீதான வழக்கு தொடரும்
அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெர்வுசெய்யப்பட்ட டொனல்ட் டிரம்ப் மீதான வர்த்தகக் கணக்கு முறைகேட்டு வழக்கை கைவிட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் அரசாங்க வழக்கறிஞர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
அதற்குப் பதிலாக ஜனாதிபதியான அவரது இரண்டாம் தவணைக் காலம் முடியும் வரை தீர்ப்பை ஒத்திவைக்க அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
டிரம்ப் ஜனாதிபதியாகியதால் அவர்மீதுள்ள வழக்கைக் கைவிடவேண்டும் என்று அர்த்தமாகிவிடாது என்று மென்ஹாட்டன் (Manhattan) வட்டார தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் குறிப்பிட்டது.
டிரம்ப் வழக்கின் தீர்ப்பு இம்மாதம் 26ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று இதற்குமுன் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
ஆபாசப் பட நடிகை ஒருவருக்கு வழங்கப்பட்ட தொகையை மூடிமறைக்க டிரம்ப் முயற்சி செய்ததாகக் கடந்த மே மாதம் டிரம்ப்மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.
அவரது வழக்கறிஞர்கள் அந்த வழக்கை முறியடிக்கத் தொடர்ந்து போராடுகின்றனர்.