இத்தாலியில் அந்தரத்தில் ஊசலாடிய கேபிள் கார் : பீதியில் உறைந்த பயணிகள்!

ஒரு பெரிய மலைத்தொடருக்கு மேல் கேபிள் கார் ஊசலாட தொடங்கிய நிலையில் சுற்றுலா பயணிகள் பீதியில் மூழ்கியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
30 சுற்றுலாப் பயணிகள் Freccia nel Cielo கேபிள் காரில் பயணம் செய்து கொண்டிருந்த நிலையில், இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது.
வடக்கு இத்தாலிய Tofane மலைத்தொடரைக் கடந்து செல்லும் போது குறித்த கேபில் காரை மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பயணிகள் அச்சத்தில் தங்கள் உறவினர்களுக்கு வீடியோ கோல் அழைப்புகளை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும இறுதி நேரத்தில் அவர்கள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளனர்.
(Visited 16 times, 1 visits today)