ஸ்பெயின் நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கிய பேருந்து : மூவர் கவலைக்கிடம்!
 
																																		வடகிழக்கு ஸ்பெயினில் நெடுஞ்சாலை சுரங்கப்பாதையின் முகப்பில் பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மத்தியதரைக் கடலோர நகரமான Pineda de Mar நகருக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
அவசரகால சேவைகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, பேருந்தில் 50-60 ஜவுளித் தொழிலாளர்கள் பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 56 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
