ஓடும் போதே தீப்பிடித்து எரிந்த பேருந்து : இலங்கையில் சம்பவம்!

கொழும்பில் இருந்து எம்பிலிப்பிட்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று மாதம்பே கவுடுவாவ பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்து நாசமானது.
இன்று (10) காலை கொழும்பில் இருந்து புறப்பட்ட பேருந்தில் சம்பவம் இடம்பெற்ற போது சுமார் 50 பயணிகள் அமர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
பிரதேசவாசிகளின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் பேருந்து முற்றாக எரிந்து நாசமானது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ரக்வான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 17 times, 1 visits today)