விபத்தில் சிக்கிய பல்கலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து
ஹோமாகம டிப்போவிற்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று(14) காலை விபத்துக்குள்ளானது.
NSBM பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு இவ்விபத்தில் சிக்கியுள்ளது.
NSBM பல்கலைக்கழகம் அருகே சாரதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மதில் சுவரின் ஒரு பகுதியில் மோதி உடைத்துக்கொண்டு சென்றிருந்தது.
விபத்தின் போது பேருந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று பயணித்த போதிலும், விபத்தில் அவர்களுக்கு காயம் எதுவம் ஏற்படவில்லை.
இந்த விபத்தில் பேருந்து சேதமடைந்ததுள்ளது.விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 45 times, 1 visits today)





