மீண்டும் பலமடைந்து வரும் மொட்டுக் கட்சி!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து விலகிச்சென்ற ஆதரவாளர்கள் மீண்டும் கட்சியை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இதன்மூலம் கட்சி வலுவடைந்துவருகின்றது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் அவ்வாறு கூறினார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ” தேசிய மக்கள் சக்தியின் வாக்கு வங்கியானது 3 சதவீதமாகவே இருந்தது. எனினும், அது 69 லட்சமாக அதிகரித்தது. அதாவது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குரிய 66 லட்சம் வாக்குகளே தேசிய மக்கள் சக்திக்கு சென்றடைந்தது.
ஆனால் தற்போது ஆதரவாளர்கள் கட்சியை நோக்கி வருகின்றனர். கிராமிய மட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பலமடைந்துவருகின்றது.” எனவும் அவர் கூறினார்.
அதேவேளை , 2029 ஆம் ஆண்டிலேயே ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, தற்போதே ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்பை கட்சி விடுக்காது எனவும் ன் யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிட்டார்.