யாழில் காதலியின் வீட்டிற்கு சென்ற காதலன் சடலமாக மீட்பு!
யாழில் காதலியின் வீட்டிற்கு சென்ற இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சுன்னாகம் காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண்ணொருவரின் வீட்டில் இருந்து ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் , அந்த வீட்டில் வசிக்கும் பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்ததாகவும் , பெண்ணின் வீட்டாருக்கும் மகளின் காதல் தொடர்பு தெரிந்து இருந்தமையால் , காதலி வீட்டிற்கு காதலன் சுதந்திரமாக வந்து செல்வதாகவும் தெரிய வந்துள்ளனது.
இந்நிலையில் காதலியின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காதலன் சடலமாக காணப்பட்டதில் , தனது மகனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக இளைஞனின் தாயார் மரண விசாரணையில் தெரிவித்துள்ளார்.





