இலங்கை செய்தி

காதலியின் வீட்டுக்குச் சென்ற வாலிபரை காணவில்லை – குடும்பத்துடன் யுவதி தலைமறைவு?

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் தனது காதலி என கூறிக்கொள்ளும் யுவதியின் வீடொன்றுக்கு சென்ற முப்பது வயதுடைய ஆண் ஒருவர் ஏழு நாட்களாக காணாமல் போயுள்ளதாக குளியாப்பிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆண் காணாமல் போன நாளிலிருந்து அவனது காதலி எனக் கூறிக்கொண்ட யுவதி தனது தந்தை, தாய் மற்றும் சகோதரர்கள் இருவர் வசித்த வீட்டை பூட்டிவிட்டு பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக அப்பகுதியின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும், யுவதியின் உறவினர் ஒருவரும் அந்த பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

குளியாபிட்டிய அபாவ டீகல்லவைச் சேர்ந்த சுசித் ஜெயவம்ச என்பவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் சைனீஸ் உணவகம் நடத்தி வரும் அவர், தனது மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றவர் என பொலிசார் தெரிவித்தனர்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!