பொரளையிலுள்ள மலர்சாலையில் வைக்கப்பட்டுள்ள “கணேமுல்ல சஞ்சீவ”வின் சடலம்

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ”வின் சடலம் கொழும்பு – பொரளை பகுதியிலுள்ள மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.
“கணேமுல்ல சஞ்சீவ”வின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி நேற்று உத்தரவிட்டிருந்தார்.
இதனையடுத்து, “கணேமுல்ல சஞ்சீவ”வின் சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோனைக்கு உட்படுத்தப்பட்டது.
பிரேத பரிசோனைக்கு பின்னர் கணேமுல்ல சஞ்சீவவின் மூத்த சகோதரி அவரது சடலத்தை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)