கொழும்பில் மர்மமான முறையில் இறந்த பெண்ணின் சடலம் மீட்பு
கொழும்பு 07, விஜேராம வீதியில் உள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் மர்மமான முறையில் சனிக்கிழமை (16) உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மித்ராணி பெர்னான்டோ ஸ்மின் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் 119க்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், உயிரிழந்த பெண்ணின் சடலம் தரையில் கிடந்ததாகவும், வாய் மற்றும் மார்புப் பகுதியில் இரத்தக் கறைகள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பில் குருந்துவத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





