இலங்கை

மட்டக்களப்பில் வாவியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு வாவியல் இருந்து மெனிங் ரைவர் வீதியில் பகுதி வாவிகரையில் உயிரிழந்த நிலையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (14) இரவு 7 மணிக்கு மீட்க்கப்பட்டுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாவியில் சம்பவ தினமான இரவு மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் சடலம் ஒன்று சிக்கிய நிலையில் அவர் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் தடவியல் பொலிஸ் பிரிவினர் அழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபர் 60 வயதுக்கு மேற்பட்டவர் எனவும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 8 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content