இத்தாலி கடற்பகுதியில் மூழ்கிய படகு : 07 பேர் மாயம்!

22 பேரை ஏற்றிச் சென்ற ஆங்கிலக் கொடியுடன் கூடிய பாய்மரப் படகு தெற்கு இத்தாலியில் உள்ள சிசிலி கடற்கரையில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
இதில் ஏழு பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 04 பிரித்தானியர், இரு கனேடியர், மற்றும் ஒரு அமெரிக்கர் மாயமானதாக கூறப்படுகிறது.
கடலோர காவல்படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒரு வயது குழந்தை உட்பட 15 பேரை அவசரகால சேவைகள் மீட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலையின் போது சிசிலியை சூறாவளி தாக்கியதால் படகு மூழ்கியதாக சந்தேகிக்கப்படும் நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
(Visited 17 times, 1 visits today)