வட அமெரிக்கா

தன் அலட்சியத்தால் 3.5 கோடி ரூபாய் காரை கண்டம் செய்த பிளாக் பேந்தர் பட நடிகர்(வீடியோ)

ஹாலிவுட் நடிகர் மைக்கேல் பி.ஜோர்டன் தனது 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான ஃபெராரி காரை, அலட்சியத்தால் சேதமாக்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

’பிளாக் பேந்தர்’ மற்றும் ’க்ரீட்’ வரிசைத் திரைப்படங்கள் வாயிலாக உலகம் முழுக்க அறியப்பட்ட ஹாலிவுட் நடிகர் மைக்கேல் பி.ஜோர்டன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஆக்‌ஷன் நாயகனாக தனது இருப்பை ஹாலிவுட்டில் தக்கவைத்திருக்கிறார். உலகில் தற்போது இருப்பவர்களில் ’கவர்ச்சியான மனிதர்’ என்ற பீப்பிள் பத்திரிக்கையின் பெருமையை 2 ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றிருந்தார். தற்போது க்ரீட் வரிசை திரைப்படங்களின் அடுத்த தவணைக்கு மும்முரமாக தயாராகி வருகிறார்.

இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்திய வழக்கில் பொலிஸ் பிடியில் மைக்கேல் ஜோர்டன் சிக்கியிருக்கிறார். நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மீது தனது ஃபெராரி காரை மோதச் செய்ததில் பொலிஸார் அவரை வளைத்துள்ளனர். சனியன்று நள்ளிரவு நிகழ்ந்த இந்த சம்பவத்தில் எவருக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. மைக்கேலிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சோதனையிலும், போதைப்பொருள் அல்லது மது உள்ளிட்ட போதைகளின் அறிகுறிகளை பொலிஸாரால் சேகரிக்க முடியவில்லை.

https://twitter.com/i/status/1731325567465652325

இருந்தபோதும், நின்று கொண்டிருந்த கியா கார் மீது, தனது ஃபெராரியை மைக்கேல் ஜோர்டன் மோதச் செய்தது ஏன் என்பது குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது தொடர்பான கேள்விகள் மற்றும் விசாரணைக்கு மைக்கேல் ஜோர்டன் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கியா மீது மோதச்செய்த மைக்கேல் ஜோர்டனின் ஃபெராரி காரின் மதிப்பு, இந்திய செலவாணியில் ரூ.3.5 கோடியாகும். அத்தனை விலை உயர்ந்த வாகனத்தை, அலட்சியமாக அவர் கையாண்ட விதத்தை சமூக ஊடகங்களில் ரசிகர்கள் சாடி வருகின்றனர். சினிமா ஹீரோவான மைக்கேல் ஜோர்டன் தன்னை நிஜத்திலும் பாவித்துக்கொண்டதால் ஏற்பட்ட இழப்பு இதுவென்று ஒரு ரசிகர் சாடியுள்ளார்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!