விளையாட்டு

வடக்கின் போர் மார்ச் 05 ஆம் திகதி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான “வடக்கின் போர்” என்றழைக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப் போட்டி நாளை மறுதினம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த துடுப்பாட்ட போட்டி 119 வது முறையாக நடத்தப்படுகின்றது.

போட்டியானது மார்ச் 5, 6 மற்றும் 7ஆந் திகதிளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து, 23வது மட்டுப்படுத்தப்பட்ட பந்து வீச்சுக்கான (50 ஓவர்கள்) போட்டி 2026 மார்ச் 14ஆந் திகதியன்று புனித பரியோவான் கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.

வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட முதலாவது வடக்கின் போர் 1904 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

இதுவரை இடம்பெற்ற 118 போட்டிகளில், புனித பரியோவான் கல்லூரி 40 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 29 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

அத்துடன், 41 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைடைந்தன. மேலும், 07 போட்டிகளுக்கான முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை என்பதுடன் ஒரு போட்டி இடையில் கைவிடப்பட்டது.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!